நிலத்தேர்வு
              
                - விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட  நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட  நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது.  அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக  இருத்தல் வேண்டும்.
 
                 
               
            பயிர்  விலகு தூரம்
              
                - விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது  பிற இரகம் மற்றும் சான்று பெறாத அது இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 200 மீட்டர் இடைவெளி  விட்டு இருத்தல் வேண்டும்
 
                | 
            | 
         
             
       
      
        
            | 
            | 
            | 
         
        
          | பூக்கும் தருணம் | 
          தன்மகரந்த சேர்க்கை | 
          முதிர்த நிலை | 
         
       
       
      
        
          விதைக்கும்  முன் விதை நோ்த்தி
              
            
                - விதைகளை 2 சத பொட்டாசியம் குளோரைடு  கரைசலில் 16 மணி நேரம் ஊற வைத்து பிறகு 5 மணி நேரம் நிழலில் விதைகளின் ஈரத்தன்மை  8-9 சதமாக குறையும் வரை உலர வைக்க வேண்டும்.
 
               
            பருவம் 
            
                - அக்டோபர்-டிசம்பர் மற்றும் ஜீன்-செப்டம்பர்
 
             
            உரமிடுதல் 
            
                - தேவையான தழை, மணி மற்றும் சாம்பல்  சத்தின் அளவு ஒரு ஹெக்டேருக்கு 100:50:50 கிலோ ஆகும். இதில் ஹெக்டேருக்கு  50:50:50 கிலோ என்ற அளவில் அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தை விதைத்த 30 நாட்களுக்குப்  பின் மேலுரமாக இடுதல் வேண்டும்
 
              | 
           
             
             
        
          பயிர் இடைவெளி 
              
            
            இலைவழி  உரம் தெளித்தல்              
            
                - விதைப் பிடிப்பினை கூட்ட தூர்  கட்டும் பருவத்தில் 1 சத டை அம்மோனியம் பாஸ்பேட் தெளிக் வேண்டும்
 
               
             | 
            | 
         
             
             
        
          அறுவடை 
               
           
          
            
                - விதைகள்  50 சத பூக்கும் பருவத்திலிருந்து 27 முதல் 30 நாட்களில் வினையியல் முதிர்ச்சியை அடைகின்றது.
 
                - கதிர்களை  ஒரே முறையில் அறுவடை செய்யலாம்.
 
                - தூர்  எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கதிர்களை இருமுறைகளாக அறுவடை செய்தல் வேண்டும்.
 
                - கதிர்களின்  ஈரப்பதம் 15-20% என்ற அளவில் இருக்கும் பொழுது இயந்திரம் கொண்டு விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.
 
                - கடைசியாக  வெளிவந்த தூர்களிலிருந்து அறுவடை செய்த கதிரை விதை உற்பத்திக்கு எடுத்துக் கொள்ளுதல்  கூடாது
 
               
             | 
          .png)  | 
         
             
             
        
          உலர்த்துதல் 
            
              - விதைகளை சூரிய ஒளியிலோ அல்லது  இயந்திர உலர்ததுவதன் மூலமோ 8 முதல் 12 சத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்
 
             
            விதைச் சுத்திகரிப்பு 
                       
            
                - விதைகளை 4/64”(1.6 மி.மீ) அல்லது  5/64”(2.0 மி.மீ) கண் அளவு கொண்ட வட்ட வடிவ சல்லடை மூலம் சலித்தல் வேண்டும்.
 
               
            விதை நேர்த்தி 
            
                - விதைகளை  ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் மருந்தினை 5 மிலி நீரில் கலந்து நேர்த்தி  செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.(அல்லது)
 
              - விதைகளை  ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை உலர் கலவையாகக் (கால்சியம்  ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில்  கலந்த  கலவை) கலந்து வைக்க வேண்டும் 
 
              | 
           
             
             
        
          விதைச்  சேமிப்பு
              
            
                - விதைகளின் ஈரப்பதத்தினை 10 முதல்  12 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பகைளில் குறுகிய கால சேமிப்பிற்காக  (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
 
                - விதைகளின் ஈரப்பதத்தினை       8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால       சேமிப்பிற்காக (12-15 மாதங்கள) சேமித்து வைக்கலாம்.
 
                - விதையின்  ஈரப்பதத்தினை 8 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன்  பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்ககாக சேமித்து வைக்கலாம்
 
               
            இடைக்கால விதை நேர்த்தி 
            
                - விதை முளைப்புத் திறன், விதைச்  சான்று அளிப்புக்கு தேவையான குறைந்த பட்ச முளைப்புத் திறனை விட 5-10 சதம் குறையும்  போது விதைகளை 3.6 கிராம் டைசோடியம் பாஸ்பேட்டை 100 லிட்டர் நீரில் கரைத்த கரைசலில்  ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல் என்ற அளவில் 3 மணி நேரம் ஊற வைத்துப் பின் 8 சத  ஈரப்பதம் வரும் வரை உலர்த்த வேண்டும்.
 
              | 
         
             
             தகவலுக்கு: 
பேராசிரிய மற்றும்  தலைவர், 
விதை மையம் 
தமழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகம் 
கோயமுத்தூர்-641003. 
தொலைபேசி எண்:0422-661232. 
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in  
 
        
       |